Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / விஷாலுக்கு இந்த தைரியம் இருக்கா? பிரபல திரையரங்க உரிமையாளர் விளாசல்

விஷாலுக்கு இந்த தைரியம் இருக்கா? பிரபல திரையரங்க உரிமையாளர் விளாசல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமல்ல நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பதவி வகித்து வருகிறார் விஷால்.

இவர் தற்போது திரையரங்கத்தில் புரெஜெக்டருக்கான Qubeக்கான செலவை தயாரிப்பாளர்கள் ஏற்க முடியாது என்று ஸ்ட்ரைக்கை அறிவித்தார். இதில் திரையரங்கத்துக்கு பல்வேறு கோரிக்கை வைத்தார்.

இதுபற்றி பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் கூறுகையில், விஷாலின் முட்டாள்தனத்தால் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சாத்தியமில்லாத கோரிக்கை வைத்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு குறிப்பிட்ட திரையரங்கு மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்று விஷால் கூறுகிறார்.

இதுதற்போது எப்படி சாத்தியம், வசூல் எப்படி பெற முடியும், முன்னணி நடிகர் இல்லை என்றாலும் பிரபலமாக இருக்கும் விஷால் முதலில் அவருடைய படத்தை குறைந்த திரையரங்கில் மட்டும் திரையிட சம்மதிப்பாரா பார்ப்போம் என்று நிகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv