பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கருத்தில் கொண்டே இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரிகோஸ்ட், கானா, நைஜீரியா, கமரூன் ஆகிய ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு நுழை விசைவு வழங்கப்படுவதற்கு முன்னர், முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும்.
ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக சிரியா மற்றும் எகிப்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆய்வுக்குட்படுத்தப்படுவர். இந்த நாடுகளில் இருந்து இலங்கைக்குள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.
கானா, நைஜீரியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணகள் சட்டவிரோத குடியேற்றம் குறித்தும், பாகிஸ்தானில் இருந்து வருவோர் அடைக்கலம் கோருவது குறித்தும் கண்காணிக்கப்படுவர்.
அத்துடன், எதிர்காலத்தில் ஆப்பானிஸ்தான் மற்றும் உகண்டா போன்ற நாடுகளில் இருந்து விஜயம் செய்பவர்களுக்கும் இதே நடைமுறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.