Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை விஜயதாஸவே பாதுகாத்து வந்தார்! – நளின் பண்டார 

மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை விஜயதாஸவே பாதுகாத்து வந்தார்! – நளின் பண்டார 

மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே பாதுகாத்து வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி அரசு ஈராண்டுகளைக் கடந்துள்ள நிலையில் முக்கிய சில இலக்குகளை அடைந்துள்ளது. எனினும், திருடர்களைப் பிடிக்க முடியாமல் போனதே பாரியதொரு தவறாக  இருக்கின்றது.
கடந்த ஆட்சிக்கால திருடர்களை ஜனாதிபதியா அல்லது பிரதமரா அல்லது அதற்கும் அப்பால்பட்ட வேறொரு சக்தி பாதுகாத்து வருகின்றதா எனச் சந்தேகம் இருந்தது.
ஆனால், எமது நீதி அமைச்சரே கைதைத் தடுத்து – தாமதப்படுத்தி வந்துள்ளார் என்பது புலனாகியுள்ளது. எனவே, அவரை பதவி விலகுமாறு கோரியுள்ளோம். இன்று ( நேற்று) அல்லது நாளை ( இன்று) அது நடக்கும். அதன்பின்னர் அதிரடி நடவடிக்கை இடம்பெறும்” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv