Saturday , August 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / படையினர் மக்களுக்கு உதவி வரும் காரணத்தை கூறும்: சி.வி

படையினர் மக்களுக்கு உதவி வரும் காரணத்தை கூறும்: சி.வி

நாட்டின் அரசியல் குழப்பங்களை தீர்க்க இலங்கை நீதித்துறை சிறப்பாக செயற்பட்ட நிலையில், யுத்த குற்றங்கள் விடயத்திலும் நீதியை எதிர்பார்ப்பதாக வட. மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.சிக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 100 குடும்பங்களுக்கு முன்னாள் முதலமைச்சரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கில் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் படையினரை விமர்சித்தார்.

தற்போது படையினர் மக்களுக்கு உதவி வருவதானது, ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை பாதுகாப்பதற்கான முயற்சி எனக் குற்றம் சாட்டினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv