Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விக்னேஸ்வரன் அரசியலுக்கு பொருத்தமானவரல்ல

விக்னேஸ்வரன் அரசியலுக்கு பொருத்தமானவரல்ல

தமிழ்த் தலைவர்களின் பொறுப்பற்ற கருத்துக்களின் காணரமாகவே, சிங்கள மக்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் தீர்வை எதிர்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் கட்டமைப்பின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.இந்த முறைமையிலான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கும் தரப்பினருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், விக்னேஸ்வரன் அரசியலுக்கு பொருத்தமானவரல்ல என்று கூறியுள்ளார்.

எனவே, அவர் அரசியலிருந்து விடைபெற்று வேறு எதனையாவது செய்ய வேண்டும் என்றும் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv