நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? பிக்பாஸில் வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வார உறுதியோடு முடிகிறது. தற்போது ஷெரின், லாஸ்லியா, மூகின் மற்றும் சாண்டி ஆகியோர் மட்டுமே பைனல் லிஸ்டில் உள்ளனர்.
அவர்களில் டைட்டில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ள நிலையில் தற்போது வனிதா, அபிராமி, கஸ்தூரி உள்ளிட்டவர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அதில் வனிதாவால் தற்போது பெரிய பிரச்னையை உண்டாகியுள்ளது. தர்ஷன் சென்ற வாரம் வெளியேற ஷெரின் தான் காரணம் என வனிதா கூறியதால் ஷெரின் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மேலும் “நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா?” என வனிதா கோபத்துடன் கேட்டுள்ளது தற்போது வந்துள்ள இரண்டாவது டீசரில் காட்டப்பட்டுள்ளது.
vote online to save your favourite contestants today!



