சின்மயி பாலியல் புகார் தான் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்ட் போல. தன்னை தொடர்ந்து பல பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து சின்மயி வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பும் இதே போல் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்காக சில பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டார்.
அதற்கு மதன் கார்க்கி ‘சின்மயி நீ சரியான பாதையில் செல்கிறாய், உனக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.
இதை தற்போது குறும்புக்கார சில டுவிட்டர் வாசிகள் ஷேர் செய்து கலாட்டா செய்து வருகின்றனர், தெரியாமல் பார்ப்பவர்களுக்கு இது என்னமோ சமீபத்தில் அவர் தெரிவித்தது போல் தான் தெரிகின்றது.