பா.ஜனதா இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தலைமை தாங்கினார். மாநில இளைஞ ரணி பொதுச் செயலாளர் வசந்தராஜன், மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டு வைகோவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
உடனே அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வசந்தராஜன் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது 2 பேர் திடீரென வைகோ உருவ பொம்மையை கொண்டு வந்து எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனே போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து உருவபொம்மையை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து உருவபொம்மையை எரித்ததாக போத்தனூர் மேட்டூரை சேர்ந்த கார்த்திக் குமார்(35), ரஞ்சித் (24) ஆகியோரை கைது செய்தனர்.