உலக ஒழுங்கின் அடிப்படையில் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒன்று என்றும் எனினும் , எந்தவொரு நாட்டுக்கும் அடிமைப்பட்டும், நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் ஒருபோதும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தேசிய மாநாடு இன்று பத்தரமுல்லை, புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் , பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் எந்த நாட்டுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டாலும், அது ஒரு குறிப்பிட்ட வியாபார உடன்படிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், எமது நாட்டின் இறைமையில் கை வைக்கும் நடவடிக்கையாக இருக்க முடியாது எனவும் pஎரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.