“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அரசின் சார்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்” என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தினேஷ் குணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பில் பதிலளிப்பதற்கு மூன்று வாரங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு காலம் எடுத்துக்கொள்வதால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை” – என்றார்.
“எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து ஈராண்டுகளே கடந்துள்ளன” – என்று சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதன்போது சுட்டிக்காட்டினார்.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw