ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அங்கு வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“ஊடகவியலாளர் சிவராம் இல்லையெனில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. சிவராம் படுகொலையுடன் தொடர்பான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. படுகொலையுடன் தொடர்புடையவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.