Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு

சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு

சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு

சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

சண்டையை முடிவுக்குக் கொண்டு வர கடந்தாண்டு அமெரிக்கா, ரஷியா நாடுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த விஷயத்தில் உடன்படிக்கை ஏற்படவில்லை.

போர் விவகாரத்தில் சிரியா, ரஷியா இரண்டு நாடுகளும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக உள்ளன. சிரிய படைகள் குளோரின் வாயு, கடுகு வாயு ஆகியவற்றால் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் சிரிய படைகளிடம் ஐ.நா சபை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

இந்நிலையில், சிரியாவுக்கு மற்ற நாடுகள் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா சபை இன்று முடிவு செய்துள்ளது. இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், ரஷியா இந்த வாக்கெடுப்பை வீட்டோ மூலம் நிராகரிக்க முடிவு செய்துள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …