ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளை பாதுகாக்கும் அனைத்து உடன்படிக்கைகளிலும் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். ஐ.நாவின் விசேட நிபுணர்கள் இங்கு வரும் போது அவர்களுக்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கட்டாயனமானது. ஐ.நாவை பகைத்துகொண்டு எம்மால் சர்வதேசத்தில் செயற்பட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஐ.நாவின் சிறப்பு நிபுணர் இலங்கை குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் இவரிடனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
எமது நாடு ஒரு சிறிய தீவாகும். எவருடன் மோதுவது என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையுடன் மோத பார்கிறோம். ஐக்கிய நாடுகள் சபை என்பது எது? அது ஒரு இராஜ்சியம் அல்லது. சர்வதேச நாடுகளின் அமைப்பு. நாமும் அதன் அங்கத்துவ நாடு.
ஐ.நாவில் இருந்து வரும் விசேட நிபுணர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அவர்கள் எமக்கு எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை எடுத்துக்கொண்டே வருவார்கள்.
ஐ.நாவின் மனிதவுரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலான அனைத்து உடன்படிக்கைகளிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் நல்லிணக்க விடயங்களை நாம் மேற்கொண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. 2015ஆம் ஆண்டு நாம் வெற்றிபெற்றிருக்காவிடின் அவ்வாண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக சர்வதேச பொருளாதார தடைவிதித்திருப்பதை அவராலும் தடுத்திருக்க முடியாது.