Thursday , November 21 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர்.

இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்ட மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் கடந்த 1-ந்தேதி கொண்டு வரப்பட்டது. இதை பிரதமர் தெரசா மே தாக்கல் செய்தார்.

ஆனால் இந்த மசோதா தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று 2-வது தடவையாக இம்மசோதா பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் மசோதா மீது 3 மணி நேர விவாதம் நடந்தது. இறுதியில் அதுவும் ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது.

இது பிரதமர் தெரசா மே அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …