Friday , August 22 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / துருக்கி நாட்டு ஜனாதிபதியை விமர்சனம் செய்த குற்றத்திற்காக மிஸ் துருக்கி பட்டத்தை இழந்த அழகி

துருக்கி நாட்டு ஜனாதிபதியை விமர்சனம் செய்த குற்றத்திற்காக மிஸ் துருக்கி பட்டத்தை இழந்த அழகி

துருக்கி நாட்டில் சில தினங்களுக்கு முன்னர் 2017-ம் ஆண்டின் ‘மிஸ் துருக்கி’ அழகி போட்டி நடந்துள்ளது.இப்போட்டியில் பங்கேற்ற இடிர் எஸென்(18) என்பவர் மிஸ் துருக்கியாக வெற்றி பெற்று மகுடம் சூட்டப்பட்டார்.

எனினும், பட்டம் அளித்த சில மணி நேரங்களில் மேடையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.‘மிஸ் துருக்கியாக தேர்வு செய்யப்பட்ட இடிர் எஸெனின் அழகி பட்டம் திரும்ப பெற்றுக்கொள்ளப்படுவதாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுக் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுகையில், ‘கடந்தாண்டு ஜூலையில் ஜனாதிபதியான எர்டோகனின் ஆட்சியை கைப்பற்ற புரட்சி நடைபெற்றது. இப்புரட்சியில் ஜனாதிபதிக்கு எதிராக போரிட்டு உயிரிழந்த வீரர்களை இடிர் எஸென் புகழ்ந்து பேசி டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

இவ்விபரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஜனாதிபதியை எதிர்த்தவருக்கு மிஸ் துருக்கி அழகி பட்டம் சூட முடியாது’ என தெரிவித்துள்ளனர்.

மிஸ் துருக்கி அழகி பட்டத்தை இழந்த இடிர் எஸென் கூறுகையில் ‘ராணுவ புரட்சி பற்றி நான் பொதுவாக தான் கருத்து கூறினேன். நான் ஒன்றும் அரசியல்வாதி இல்லை’ என வேதனையுடன் கருத்தை தெரிவித்துள்ளார்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …