தன்னை மீண்டும் கைதுசெய்யும் முயற்சி இடம்பெறுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த அரசுக்கு எதிராகச் செயற்படுகின்ற அரசியல்வாதிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, வசீம் தாஜுதீனின் கொலை விவகாரம் தன்னுடைய தம்பியின் காதலியிடமிருந்து ஆரம்பமாகி தனது அம்மா வரை வந்து முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ராஜபக்ஷக்களுக்கு சொந்தமான 20 காணிகள் உறுதிகளுடன் இருப்பது தொடர்பில் தன்னிடம் தகவல்கள் இருப்பதாக க்கூறுகின்றார். அவ்வாறு இருந்தால் கொண்டு வாருங்கள் என அவரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தறை கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.