Sunday , April 20 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / டிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த ஆராய்ச்சியாளர்

டிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த ஆராய்ச்சியாளர்

டிரம்ப்பின் நிர்வாண சிலையை ஆராய்ச்சியாளர் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவரது நிர்வாண சிலை ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த சிற்பி ஒருவர் அவரது கை வண்ணத்தால் உருவாக்கினார்.

இந்த சிற்பம் அவர் அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் 2016-ஆம் ஆண்டு வைக்கப்பட்டிருந்து.

இந்த சிலையை ஜுலீயன் நிறுவனம் ஏலம் விட முடிவு செய்து, மே 2-ஆம் தேதி சிலையை ஏலம் விடப்போவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று டிரம்ப் சிலையை அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் ஸாக் பாகான்ஸ் என்பவர் இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv