உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் தளம்பலைத் தோற்றுவித்துள்ள நிலையில், நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதால், நாளைய தினம் இரு கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியற்சிக்குமென அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பொருட்டு, கட்சித் தாவல்களும் இடம்பெறலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு பிரதமர் பதவியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
பிரதமர் பதவியை ரணில் துறக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தாலும், அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிப்பேன் என ரணில் கூறியுள்ளார்.
இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியிலேயே நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது அரசியல் களத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய விடயங்கள் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.