மேஷம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தி னர் வருகை அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
ரிஷபம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் பொங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கடகம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
சிம்மம்: பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந் ததை வாங்கித் தருவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் வரும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். தொட்டது துலங்கும் நாள்.
துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுமை படைக்கும் நாள்.
விருச்சிகம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.
தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக் கப்படுவீர்கள். வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தைரியம் கூடும் நாள்.
மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள் முதல் செய்வீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மன உளைச்சல் ஏற்படும். குடும் பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். போராடி வெல்லும் நாள்.