Wednesday , August 27 2025
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 22.12.2017

இன்றைய ராசிபலன் 22.12.2017

Loading…


மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மிதுனம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். எதார்த் தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். போராட்டமான நாள்.

கடகம்: மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்:  எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவு
வார்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பிதருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.  வியாபாரத்தில் போட்டிகளை
யும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

மீனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். சிறப்பான நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv