Wednesday , February 5 2025
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் – 2.11.2017

இன்றைய ராசிபலன் – 2.11.2017

மேஷம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதுலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.  தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி தங்கும். புது வேலைக் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில்  வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செல்வாக்கு உயரும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உதவிக் கேட்டு  தொந்தரவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில்  முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கன்னி: பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்  தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்:  பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர்  பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.  அமோகமான நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள்  தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிட்டும். கனவு நனவாகும் நாள்.

தனுசு: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.  நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில்  மூழ்கும் நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து  பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். முகப்பொலிவு கூடும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.  வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv