Thursday , October 16 2025
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 15.03.2018

இன்றைய ராசிபலன் 15.03.2018

மேஷம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மனநிறைவு கிட்டும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

சிம்மம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நன்மை கிட்டும் நாள்.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் தள்ளி போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான
செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.

மகரம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட புதிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உடல் நலம்பாதிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்: எதிர்காலம் பற்றிய பயம் வந்து செல்லும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv