Thursday , November 21 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 13.08.2018

இன்றைய ராசிபலன் 13.08.2018

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்: பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக் கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும் நாள்.

மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவி யில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். முகப்பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத் திடாதீர்கள். சொத்து விவகாரத்தில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.

விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். நேர்மறை சிந்தனைகள் உருவாகும். வீடு, வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களை யும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோ கத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv