Thursday , November 21 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 09.08.2018

இன்றைய ராசிபலன் 09.08.2018

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிட்டும். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த  தொகைகைக்கு வரும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

தனுசு: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அமோகமான நாள்.

கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

மீனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv