Friday , November 22 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 08.10.2018

இன்றைய ராசிபலன் 08.10.2018

மேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சி களில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத் தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையைபெறுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையா னவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர் பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சா கம் பொங்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட் களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகளைகுறைக்க முடியாமல் திணறுவீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளைசொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை,அயலார் சிலரின் செயல் பாடுகளால் கோபம், எரிச்சல்அடையலாம். வாகன விபத்துகள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் கடினமாக  உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: உங்களின் இலக் கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர் வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திட்டம் நிறை வேறும் நாள்.

தனுசு: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். வியா பாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பானசூழல் உருவாகும் உறவினர் களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மன உளைச் சல் ஏற்படும். முக்கியகோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

மீனம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv