மேஷம்: மாலை 3.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் உங்களுடைய பலம் என்று மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவுசுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக்கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடை யின்றி முடியும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 3.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர் கள். சபைகளில் மதிக்கப் படுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.
கடகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச் சியும், உறவினர்களால் நன்மையும் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மதிப்புக் கூடும் நாள்.
சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
கன்னி: மாலை 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப் போது ஆதங்கப்படுவீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
துலாம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங் கள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் அதிக ரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாலை 3.30 மணி முதல் சந்திராஷ் டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார் கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத் துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதல டைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.
கும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் பிறக்கும் நாள்.
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.