Sunday , November 17 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 05.05.2018

இன்றைய ராசிபலன் 05.05.2018

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபார த்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

சிம்மம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையா னவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த  இடத்திலி ருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பங்குதார ர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். வராது என்றிருந்த பணம் வரும். நட்பு வட்டம் விரியும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பூராடம் நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராட்டமான நாள்.

மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பிரியமானவர்களு க்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படை ப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv