Sunday , November 17 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 04.02.2018

இன்றைய ராசிபலன் 04.02.2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபா ரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும் பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்-மனைவிக் குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப் பின்மையால் லாபம் குறையும். உத்யோ கத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னை களையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர் கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னை நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். தடைகள் உடைபடும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவை யற்ற அலைச்சல்கள் அதிகரிக் கும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். தர்மசங்கடமான சூழ் நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv