முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இளநீர் விற்பனைத் திட்டத்துக்காக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 5 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
முல்லைத்தீவில் போரால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த பலர் வறுமையில் வாடுகின்றனர்.
அவர்களின் அன்றாட பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக துரைராசா ரவிகரன் தனது பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு மூலம் குறித்த நிதி ஒதுக்கீட்டைச் செய்திருந்தார். இந்த திட்டத்துக்குள் இருபத்தியொரு மாற்றுத்திறனாளிகள் உள்ளீர்க்கப்பட்டிருக் கின்றனர்.
இது தொடர்பாக நேற்று முல்லைத்தீவு சமூக சேவைத் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினருடன், மாவட்ட சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர் நடராசா தசரதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.