கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நிராகரிப்பதாக தமழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அன்மையில் தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இன்னாள் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையின் தவிசாளர்கள் நகர முதல்வர்கள், மாநகர மேயர்கள் அனைவரும் ஹிஸ்புல்லாவின் அழைப்பினை புறக்கணிப்பதென மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் துரைராசசிங்கம் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
இதனை அன்றைய ஊடங்களின் ஊடாக தெளிவாக தமிழரசுக் கட்சியினர் தெளிவுபடுத்தியிருந்தனர்.
ஒட்டுமொத்தத்தில் இந்த முடிவிற்கு யாவரும் கட்டுப்பட்டிருந்ததோடு அதற்கேற்றாற்போலவே அனைவரும் செயற்பட்டிருந்தனர்.
இம்முடிவானது முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் ஆளுநருக்கு எதிரானது என்றும் தெளிவாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய பங்காள கட்சிகள் அனைத்தும் தெரியப்படுத்தியிருந்தன.
இந்த சூழலில் திருகோணமலை நட்சத்திர விடுதியில் ஆளுநரின் சந்திப்பிற்கு கட்சியின் முடிவை மீறியதற்கு அப்பால் கிழக்கு மகாண தமிழ் மக்களின் நெஞ்சங்களின் மேல் ஏறி தமது தொழில் ரீதியான நலன்களுக்காக இந்த சந்திப்பில் மக்களை அடகு வைத்து சிலர் அரசியல் செய்துள்ளனர்.
திருகோணமலை நகரசபை தலைவர் இராசநாயகம், பிரதேச சபை தலைவர் குணாளன்,மூதுார் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் துரைநாயாகன் ஆகியோர் இவ்வாறு கூட்டத்திற்கு சென்றுள்ளனர், இவர்கள் எதற்காக சென்று ஆளுநரை சென்று சந்தித்தார்கள்.
கட்சியின் பொதுச் செயலாளர் மிக தெளிவாக மூன்று மாவட்டத்தினுடைய தமது கட்சியின் மேற்குறிப்பிட்ட பிரதிநிதிகளுக்க முழுமையாக இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த இடத்தில் இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல எனவும் கூறினார், ஹிஸ்புல்லாவின் தனி நபர் ஆயுத குழுவுக்கு எதிரான நிலைப்பாடு எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இப்படியான சூழலில் திருட்டுத்தனமாக அரசியலுக்கு வந்த குணாளன் மற்றும் இராசநாயகம் திருட்டுத்தனமாக ஆளுநரை சந்தித்தமை எந்த அளவு உண்மையான வேலை என அவர்களுக்குத் தெரியும்.
எந்தவொரு காலத்திலும் இராசநாயகம் மற்றும் குணாளன் போன்றவர்கள் தமிழர்களுக்க சார்பாகவோ தமிழர்களுக்கு குரல் கொடுத்த எந்தவொரு அடையாளமும் திருகோணமலையில் இல்லை.
இருவரும் தனிப்பட்ட ரீதியில் பல்வேறுபட்ட தொழில் மற்றும் தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்ட பல்வேறுபட்ட வியாபாரங்களில் ஈடுபடுபவர்களே இவர்கள் இருவரும்.
இப்படியான நிலையில் இவர்கள் நேற்று ஹிஸ்புல்லாவை சந்தித்தமையானது எல்லோரும் வெறுத்தாலும் நாங்கள் உங்களை வெறுக்கவில்லை, கிழக்கு மாகாணத்தில் முடியுமானவரை எமக்கு பிச்சை போடுங்கள் ஐயா என்பது போல இருக்கின்றது.
இந்நிலையில், இவர்களின் செயற்பாட்டிற்கு கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது.
யாழ். பிரதேச சபையில் கட்சிக்கு கட்டுப்படாத பிரகாஸினை கட்சி தண்டிக்கும் நிலை வந்தது. அதுபோல திமிரோடு திருட்டுத்தனமாக ஆளுநர் ஹிஸ்புல்லாவை சந்தித்த இவர்களுக்கு என்ன நடவடிக்கை கட்சி எடுக்கப்போகின்றது.
இராசநாயகம் குனாணளன் ஆகிய இருவரும் இனத்தின் நலனை கிஞ்சித்தும் கூட பார்க்கவில்லை.
இவர்கள் ஒட்டுமொத்த கிழக்குமாக ணா மக்களின் உணர்வையும் புறம்தள்ளி கிழக்கு ஆளுநரை சென்று சந்தித்துள்ளனர். இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றார்கள் அவர்கள்.
இவர்கள் இருவரும் இவர்கள் சார்ந்திருந்த சபையை அழித்து பாரிய இனரீதியான ஒடுக்குமுறையை தமிர்களுக்கு செய்வார்கள் என்பதில் மாற்றமில்லை.
இப்படியானவர்கள், திருந்துவார்களா அல்லது வருந்துவார்களா? இவர்களை எப்படியேனும் தமிழ் சமூகம் மன்னிக்காது.
இது வரைக்கும் மக்களிடம் மன்னிப்பு கேட்காததற்கு அவர்களிடம் திருகோணமலை முக்கியஸ்தர் கேட்டதற்கு…
கூட்டமைப்பில் உள்ளதுகள் எல்லாம் அறிவு குறைந்த முட்டாள்கள் சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் கட்சியின் செயலாளரிற்கு சொந்த மூளை இல்லாதவர் எம்மை நியமித்தது சம்பந்தன் ஐயா நாம் ஏன் துரைராஜசிங்கத்தின் கதையை கேட்க வேண்டும்.. அவரின் கல்வி தகமையை விட எமது கல்வித் தகமை என்ன இவரின் கதையை எல்லாம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை எம்மை மக்களை தெரிவு செய்யவில்லை எம்மை தெரிவு செய்தது எமது தலைவர் எம்மை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது.
இன்று வரை நாம் இந்த விடயத்தைகணக்கில் எடுக்க வில்லை இனி யார் எம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது…
இது எல்லாம் சும்மா கதை தான் நாம் மீண்டும் ஆளுனரைச் சந்திப்போம் இவர்களால் என்ன செய்ய முடியும் எம்மைப் பொறுத்த வரையில் ஆளுனர் ஹிஸ்புல்லா வல்லர் அவருக்கு இணையாக கிழக்கில் யார் உண்டு மட்டக்களப்பில் கத்துபவர்கள் எல்லாம் மடையர்கள் மட்டக்களப்பனை சும்மாவா மடையன் என கூறினார்கள் அது நிஜம்.
எமது மயிரைக் கூட இந்த மட்டக்களப்பான் ஒன்றும் செய்ய முடியாது இவங்க இரவில் ஹிஸ்புல்லாவிடம் ஐயா என தொலைபேசியில் கதைப்பது வீட்டிற்கு சென்று உண்டு மகிழ்வது பின்னர் அந்த புனிதமான மனிதனை துாற்றுவது.
அது மட்டுமல்லாது சம்பந்தன் ஐயாவிற்கு அருகில் இருந்து கதைத்தால் கூட சரிவர புரிவதில்லை அந்த நிலையில் இவர்களின் புகாரை அவர் கேட்டு பதில் சொல்வதெல்லாம் பகல் கனவு இது மட்டமா…
இப்படி எல்லாம் கதைத்தது சம்பந்தனின் காதுகளிற்கு கதை எட்டிவிட்டதாம் இவர்களின் கதையால் மிக கவலையுடன் உள்ளாராம்..
இப்படியான நிலையில் இவர்களால ஒன்றும் செய்ய முடியாது பார்ப்பம் எமது பதவியை அசைக்க முடியாது என குணாளன் திருமலை மாவட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் வினா எழுப்பியதற்கு பதில் வழங்கியுள்ளார்.