விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகுவதை காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி போரையும், வன்முறைகளையும் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சம்பந்தமான வழக்குகளை விசாரித்து நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.