Thursday , October 16 2025
Home / சினிமா செய்திகள் / கமல் உட்பட யாரிடமும் உண்மை இல்லை… கோபத்தில் டானி!

கமல் உட்பட யாரிடமும் உண்மை இல்லை… கோபத்தில் டானி!

பிக்பாஸ் வீட்டில் கமல் உள்பட யாருமே உண்மையாக இல்லாமல் தங்களது நடிப்பை பிரம்மாதபடுத்தி வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு பாதிகூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் நிகழ்ச்சியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் புரமோவில் எவிக்சன் பட்டியல் நடக்கின்றது. இதில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். அதற்கு பழிவாங்கும் வகையில் வைஷ்ணவியை நாமினேட் செய்த டேனியல், என்னுடைய மொழியை வைத்து என்னை குறை கூற வேண்டாம். அது எனக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருக்கும் சுர்ருன்னு ஏறும் என்று கூறுகிறார்.

தமிழ்நாடு மூஞ்சி என்று சொல்லும்போது பக்கத்தில் நின்று சிரித்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதி போல் தமிழ் முகமூடி போட்டு இந்த வார எவிக்சனில் இருந்து தப்பிக்கலாம் என்று டேனியல் திட்டம் போடுவது போல் தெரிவதாக நெட்டிசன்கள் குற்றம் கூறி வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv