Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை; தமிழ் நாட்டிற்குத்தான் ஆபத்து

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை; தமிழ் நாட்டிற்குத்தான் ஆபத்து

காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னால் மாவட்ட திமுக அவைத் தலைவர் CVM பொன்மொழியின் திருஉருவபடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார்.

18 MLA க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்தில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  எப்போது இந்த ஆட்சி மாறும் என் மக்கள் கேட்பதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தால் இந்நேரம் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும் என்று மக்கள் தெரிவிப்பதாகக் கூறினார். பொறுமையாக காத்திருந்து எதை எப்படி செய்யவேண்டுமோ அதை செய்ய காத்திருக்கிறோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv