Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / ”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”

”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”

சீரற்ற கால­நிலை கார­ண­மாக இவ் வருடம் இடம்­பெ­ற­வுள்ள க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சை யில் எந்த வித மாற்­றங்­களும் இடம்­பெ­றாது என பதில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டி.சனத்பூஜித தெரி­வித்­துள்ளார்.

க.பொ.த.சாதா­ரண தர பரீட் சையை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சீரற்ற கால­நி­லையால் இவற்­றிற்கு எவ்­வித தடையும் ஏற்­ப­ட­வில்லை.

எனவே க.பொ.த சாதா­ரண தர பரீட்சை குறிப்­பிட்ட காலத்தில் நடை­பெறும் என அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

மேலும், அவர் இது தொடர்பில் தெரி­விக்­கையில்,

பரீட்­சாத்­திகள் அனை­வ­ருக்­கு­மான பரீட்சை அனு­மதி பத்­தி­ரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

சீரற்ற கால­நிலை வெள்ள அனர்த்தம் போன்­ற­வற்றால் பரீட்சை அனு­மதி பத்­தி­ரங்கள் சேத­மடை ந்திருந்தால் மீண்டும் புதிய அனு­மதி அட்­டைகள் வழங்­கப்­படும்.

இதே வேளை இன்று நள்­ளி­ரவு முதல் கா.பொ.சாதா­ரண தரத்­திற்­காக நடத்­தப்­படும் தனியார் வகுப்­புக்கள் அனைத்தும் தடை செய்­யப்­படும் எனவும் தெரி­வித்தார்.

இவ்­வ­ருடம் நாட­ளா­விய ரீதியில் 688,573 பரீட்­சாத்­திகள் பரீட்­சைக்கு தோற்றவுள்ளதோடு 5116 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv