அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன.
அதற்காக அவர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி செயல்பட செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக பெற்று மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையை 11 மருத்துவர்கள் அடங்கிய குழு 14 மணிநேரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தற்போது ராணுவ வீரர் தான் வழக்கம்போல் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.உலகின் முதலாவது ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை இதுதான் என தகவல்கள் கூறுகின்றன.
ஆண் உறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்கிறபோது அந்த நபரால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியாது. ஆனால், இந்த வீரருக்கு ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால் அவர் மீண்டும் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அவர் 6 முதல் 12 மாதங்களுக்குள் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.