Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழ் தாயிக்கும் மகனுக்கும் திடீரென நேர்ந்த அசம்பாவிதம்!

தமிழ் தாயிக்கும் மகனுக்கும் திடீரென நேர்ந்த அசம்பாவிதம்!

மட்டக்களப்பு புன்னச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும், மகனும் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு புன்னச்சோலை பகுதியை சேர்ந்த தர்ஷன் ஜோதிமலர் என்ற தாய் மற்றும் அவருடைய நான்கு வயது மகன் ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

வீட்டில் இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போயுள்ள குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை தேடுவதில் மட்டக்களப்பு பொலிஸார் தீவிரம் காட்டிவரும் அதேவேளை, அவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். இந்நிலையில், குறித்த இருவர் தொடர்பாக தகவல் அறிந்தவர்களை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv