முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் மற்றும் நாயாற்றுப் பகுதி ஆற்றுத்தொடுவாயில் இறால் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது. மீனவர்கள் இரவு பகலாக இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
வட்டுவாகல், நந்திக்கடல் ஏரிகளில் பிடிக்கப்படும் இறால்களுக்கு மக்கள் மத்தியில் தனிக்கிராக்கி உண்டு. ஆனால் இப்போது அவற்றை மக்களால் ருசிக்க முடியவில்லை. காரணம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகக் கொண்டுசெல்லப்படுகின்றன.
இந்தநிலையில், மாவட்டத்திலுள்ள களப்புகளில் இறால் மற்றும் மீன்பிடித் தொழில் செய்யவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கடற்ழிறொழில் அமைப்புகளின் தலைவர் ஜெயா தெரிவித்துள்ளார்.
நந்திக்கடல் களப்பினை நம்பி ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இப்போது இறால்பிடி பருவம் (சீசன்) தொடங்கியுள்ளது. பலர் இரவு பகலாக தொழில் நடவடிக்கையில் ஈடுபடுட்டு வருகின்றனர்.