Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமைச்சரின் வீட்டில் இரகசியமாக கூடிய ஐ.தே.கட்சியினர்

அமைச்சரின் வீட்டில் இரகசியமாக கூடிய ஐ.தே.கட்சியினர்

ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் வீட்டில் நேற்றிரவு இந்த இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதில் விஜேதாச ராஜபக்ச, வசந்த சேனாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டாம் நிலை முக்கியஸ்தர்கள் தொலைபேசி வாயிலாக இணைந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றத்தை நல்ல முறையிலோ அல்லது கெட்டமுறையிலோ மேற்கொள்ள போவதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க நேற்று அமைச்சரவையின் மாற்றத்தின் பின்னர் கருத்து வெளியிடும் போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv