18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அந்த அழைப்பை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் நிராகரித்துவிட்டனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் “தற்போது நடக்கும் எல்லா குழப்பத்திற்கும் சசிகலாவே காரணம். அவர் செய்த ஒன்றும் விளங்கவில்லை. தினகரனை துனை பொதுச்செயலாளராக நியமித்து சென்றார். தற்போது தினகரனால்தான் அதிமுகவே பிளவு பட்டு நிற்கிறது” என காட்டமாக பேட்டிகொடுத்துள்ளார்.
ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் இப்படி பேசியுள்ளார். அதை பொருட்படுத்த தேவையில்லை என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.