Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாடாளுமன்றில் வைத்து ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

நாடாளுமன்றில் வைத்து ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் எட்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்துகையில் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் மத்தியில் நாட்டின் நற்பெயர் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இவையெல்லாம் நல்லாட்சி அரசாங்கத்தின் சாதனைகளாகும்.

ஆனாலும் இன்னும் சில துறைகளில் பல்வேறு முன்னேற்றங்களை நாம் அடைந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக செயற்பட முன்வர வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv