இலங்கையின் தென்கிழக்கு கடலில் ஏற்கனவே உருவாகியிருந்த தாழமுக்கமானது அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக உருவாகும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தற்போது காலியிலிருந்து வடமேற்காக 185 கிலோமீற்றர் தூரத்திலும் கொழும்பிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் மணித்தியாலத்திற்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு,சப்ரகமுவ, மத்திய,மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்ரர் மழை பொழியவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.