வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் இன்றிரவு சிங்கப்பூரை சுற்றி பார்த்து பலரிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நாளை காலை அமெரிக்க ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னதாக இரவில் கிம் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துள்ளார்.
இன்று மாலை ஆறு மணியளவில் கிம் தங்கியுள்ள சென் ரெஜிஸ் ஹோட்டலிற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.
அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் கிம் மரினா பே சான்ட்ஸ் என்ற ஆடம்பரஹோட்டலிற்குள் நுழைவதை ஊடகவியலாளர்கள் பார்த்துள்ளனர்.
இதன் பின்னர் சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் பாலகிருஸ்னன் கிம் ஜொங் அன்னுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் கிம் சிங்கப்பூரை சுற்றி பார்த்த தகவல் இடம்பெற்றுள்ளது.
கிம்மை எதிர்பாராமல் சந்தித்த மகிழ்ச்சியில் சிங்கப்பூர்வாசிகள் அவரை வரவேற்றுவாழ்த்தியுள்ளனர்.
உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் அந்த சந்திப்பிற்கு முன்னர் கிம் சிங்கப்பூர் வீதிகளில் வலம் வந்துள்ளார்.
இதேவேளை டிரம்ப் உச்சிமாநாட்டிற்கு முந்தைய இரவை எப்படி செலவிடுகின்றார் என்பது குறித்து எந்த தகவலும்; வெளியாகவில்லை.
டிரம்பும் கிம்மும் சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு கப்பெலா ஹோட்டலில் சந்திக்கவுள்ளனர்.
கமராமுன் கைகுலுக்கிய பின்னர் இருவரும் தனிப்பட்ட சந்திப்பில் மொழிபெயர்ப்பாளர்கள் துணையுடன் ஈடுபடவுள்ளனர்.