ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போகுமிடம் எல்லாம் மழை பெய்கிறது. அவருடன் பல இடங்களிற்கு சென்றிருக்கிறேன்.
அங்கெல்லாம் மழை பெய்தது. யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணத்திலும் மழை பெய்தது இவ்வாறு தெரிவித்தார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன்.
சர்வதேச வடக்கு நீர் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வட மாகாண மக்கள் முகங்கொடுக்கும் நீர்ப் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆய்வு செய்தல் அதற்காக வழங்கக்கூடிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுகளை கண்டறிதல், உத்தேச நீர் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இந்த மாநாடு இடம்பெற்றது.
இந்த மாநாட்டை வடக்கு ஆளுனர் ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே இப்படி தெரிவித்திருந்தார்.
“நான் ஜனாதிபதியுடன் பல இடங்களிற்கு சென்றிருக்கிறேன். கண்டி, குருநாகல், பொலன்னறுவ, அநுராதபுரம் என சென்ற இடங்களிலெல்லாம் மழை பெய்தது.
அவர் செல்லுமிடமெல்லாம் மழை பெய்கிறது. அது ஏன் என்பதை ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும் என்றார்.