Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் பெண்ணை தீ வைக்க முயற்சித்த நபர் !

யாழில் பெண்ணை தீ வைக்க முயற்சித்த நபர் !

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் வீட்டுக்குள் தனித்திருந்த பெண் ஒருவரை தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் நபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் பெண் கூச்சலிட்டதால் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 49 வயது குடும்பப் பெண்ணை , மதுபோதையில் இருந்த 36 வயதுடைய நபர் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயற்சித்த போது, நபரைத் தள்ளி வீழ்த்தி விட்டு பெண் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் ஓடி வரவே ஆத்திரமடைந்த நபர் அங்கிருந்த மண்ணெண்ணையை பெண் மீது ஊற்றி தீயிட முயற்சித்துள்ள நிலையில் ,அயலவர்க்ள் காப்பாற்றப்பட்ட குறித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv