சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் மீளப்பெற மாட்டாதென தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று சட்ட மா அதிபருடன் இது விடயத்தில் ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தையின் பின்னரே குறிப்பிட்ட வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ரணில் தவிர்ந்த பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு மைத்திரி தயாராக இருப்பதாகவும், ஐக்கிய தேசிய முன்னணி அந்த முடிவில் விடாப்பிடியாக இருந்தால் பிரசினைக்கு இப்போதைக்கு தீர்வு கிடைக்காது எனவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.