ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வரலாற்றிலேயே முதன் முறையாக ஆளுங்கட்சி இல்லாமல் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது எமது நாட்டில் மாத்திரமே ஆகும்.
நாடாளுமன்றத்தில் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் தனது கட்சி சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் இணைந்து அரசியலமைப்பிற்கும் நாடாளுமன்ற சம்பிதாயங்களுக்கு எதிராகவும் என்ன நடவடிக்கைளை முன்னெடுத்தாலும் அதனை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை.
எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீதிமன்ற தீர்பிற்கமைய எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்“ என தெரிவித்துள்ளார்.