Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 2020இல் ஆட்சியைக் கைப்பற்ற பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்க ஜே.வி.பி. தீவிரம்!

2020இல் ஆட்சியைக் கைப்பற்ற பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்க ஜே.வி.பி. தீவிரம்!

2020ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பி. நாட்டிலுள்ள சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களுடனும், சிவில் அமைப்புகளிடனும், கல்விமான்களிடனும் தீவிர கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாக அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக எதிர்க்கும் ஜே.வி.பி., பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சியைக் கொண்டுவரும் முனைப்புடன் புதிய அரசமைப்பொன்றை கொண்டுவர அரசுடன் ஒன்றிணைந்துச் செயற்பட்டுவருகிறது. மறுபுறத்தில் 2020ஆம் ஆண்டு புதிய ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர நகர்வுகளையும் முன்னெடுத்துவருகிறது.

அதனடிப்படையில் நாட்டில் சக்திவாய்ந்த தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், கல்விமான்கள், சிவில் அமைப்புகள் மற்றும் இடதுசாரிகளுடன் தீவிர கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதாகவும் இறுதி பலம்வாய்ந்த கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv