Tuesday , December 3 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / வாரிசுகளுக்கு சீட்டு வேணுமா ? – ஸ்டாலின்

வாரிசுகளுக்கு சீட்டு வேணுமா ? – ஸ்டாலின்

திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேச மக்கள் முன்னேற்றக்கழகம்மற்றும் இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்டக் கட்சிகள் ஆகியக் கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு திமுக 20 தொகுதிகளில் நிற்கிறது.

இதையடுத்து கூட்டணி உறுதியடைந்துள்ள நிலையில் இப்போது கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் பல தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்டு வருகின்றனர். திமுக உயர்நிலைசெயல்திட்டக் குழு உறுப்பினர்களான க.பொன்முடி தனது மகன்கவுதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சித் தொகுதியை கேட்டுள்ளார். அதுபோல எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு திருவண்ணாமலை தொகுதியையும் கேட்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியும் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியனும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக போட்டியிட இருக்கும் பெரும்பாலான தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளேப் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிலரும் தங்கள் வாரிசுகளுக்காக சீட் கேட்டு தலைமையிடம் வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதை சமாளிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் வாரிசுகளுக்கு சீட் கேட்டு வருபவர்களிடம் சீட் வேண்டுமென்றால் தேர்தல் செலவுகளுக்காக கட்சியிடம் இருந்து நிதி எதிர்பார்க்காதீர்கள். நீங்களே செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளாராம். இதனால் மூத்த நிர்வாகிகள் பலர் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv