Friday , August 22 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்

பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (64) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு இன்று அதிகாலை திடீரென்று முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் ஞானியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

எழுத்தாளர் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர், மேலும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள கடுமையாக விமர்சித்து வந்தவர் ஞானி. ஞானியின் மறைவுக்கு, மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஞானியின் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv