Friday , August 22 2025
Home / முக்கிய செய்திகள் / ஆர்.கே.நகரில் இரட்டை இலை தினகரனிடம் தோல்வி அடையும்; கருத்துக்கணிப்பில் தகவல்

ஆர்.கே.நகரில் இரட்டை இலை தினகரனிடம் தோல்வி அடையும்; கருத்துக்கணிப்பில் தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சார்ப்பில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி அடைவார் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 7 வார்டுகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் மொத்தம் 1267 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் திமுக 33% வாக்குகளையும், ஆளும் கட்சி 26% வாக்குகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலையில் போட்டியிடும் மதுசூதனனை விட சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் 28% வாக்குகளை பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு தகவல் அதிமுக வட்டாரத்தில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி தலைமையிலான அரசு மீது பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உங்களின் ஏகோபித்த முடிவை ஆர்.கே.நகர் மக்கள் தெரிந்து வாக்களிக்க இது ஒரு அருமையான வாய்ப்பு. ஆகவே, கட்டாயம் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். வாக்களித்து பின் பகிருங்கள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv